தோட்ட தொழிலாளர்கள் போனஸ் பிரச்சனை உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு கோரிக்கை!!
வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் போனஸ் பிரச்சனை உரிய நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு தோட்டத் தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்கம் கோரிக்கை.
கோவை மாவட்ட தோட்டத் தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்கம் (சிஐடியூ) சார்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு.
மனுவில்;- மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக பணிவான வணக்கம்.
வால்பாறை பகுதியில் தேயிலைத்தோட்டங்களில் பணிபுரியும் அடித்தட்டு மக்கள் குறைந்த சம்பளத்தில் அடிப்படை வசதிகள் இன்றியும், எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க தற்பொழுதும் இரண்டு மூன்று தலைமுறைகளாக தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் போனஸ் 1965-ம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்ட 8.33% சதவீதத்திலேயே இன்றைய விலைவாசிக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருவது உகந்ததாக இல்லை. தற்பொழுதும் குறைந்தபட்சமாக ஒரு நபருக்கு சுமார் ரூ.6000 வரை கிடைப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வரும் உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் 31.10.2024 தீபாவளி திருநாள் கொண்டாட முடியாமல் சிரமப்படுகின்றனர், வேதனைப்படுகின்றனர். அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமலும் தவிக்கிறார்கள். சுமார் 7 தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் இப்பகுதியில் உள்ளது. இவர்களிடம் வரும் தீபாவளி பண்டிக்கைக்கு முன்னதாகவே முன்பணமாக ரூ.5000 அவரவர்கள் கணக்கில் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் எஸ்டேட்டில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தாங்கள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தற்பொழுது வழங்கப்பட்டுள்ள போனஸ் தொகையினால் அவர்கள் வாழ்வாதாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மிகவும் பின்தங்கியுள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
P.பரமசிவம்- பொதுச்செயலாளர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ் குமார்.
Comments