இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் மகன் ராகுல் (25), இவர் தனது இரு சக்கர வாகனத்தில் விளாத்திகுளம் அருகே உள்ள இடைச்சியூரணி கிராமத்தில் உள்ள தனது பாட்டியை பார்க்க சென்றுவிட்டு விளாத்திகுளம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, வாதலக்கரை கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி மகன் பரமசிவம் (65), விளாத்திகுளத்தில் இருந்து வாதலக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கரிசல்குளம் - இடைச்சியூரணி இடையே இரு இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் ராகுல் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பரமசிவம் காயங்களுடன் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments