கோவில் திருவிழாவின் போது நள்ளிரவில் பட்டாசுகள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரில் உள்ள அஞ்சுதம்பலம் வீரரேர்காவு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நள்ளிரவில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. கோவில் திருவிழா வான வேடிக்கைகளின் போது கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறி, குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகளின் மீது விழுந்து எரிந்தது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. கோவில் திருவிழாவில் வானவேடிக்கையை ரசித்துக் கொண்டிருந்த பக்தர்களும் பொதுமக்களும் வெடித்துச் சிதறிய பட்டாசுகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டு அலறித் துடித்தனர்.
இந்த சம்பவத்தில் 154 பேர் படுகாயமடைந்த நிலையில் காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.
Comments