விபத்து நேரத்தில் காயமடைந்தவர்களை எப்படி காப்பாற்றி மருத்துவ சிகிச்சை செய்கிறார்கள்? தத்ரூபமாக செய்து காட்டிய ரயில்வே நிர்வாகம்!!

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா (தனியார்) மருத்துவமனை மற்றும் சேலம் கோட்ட கோவை ரயில்வே துறையினர், மீட்பு பணித்துறையினர், காவல்துறையினர் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு ரயிலுக்குள் பயணிகள் காயமடைந்ததை போன்றும் அவர்களை காப்பாற்றுவது போன்றும் சித்தரித்து ஒத்திகை நிகழ்ச்சி ஒன்றை தத்ரூபமாக செய்து காட்டினர். 

காயமடைந்தவர்கள் போன்று நடித்தவர்களுக்கு ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், கோவை மாவட்ட மீட்பு பணி துறையினர், காவல்துறையினர் மீட்பது மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்ற செயல்பாடுகள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை பார்வையிட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை ஆணையாளர் ஸ்டாலின், இது போன்ற நேரங்களில் பொதுமக்கள் பதற்றம் அடையாமல் உடனடியாக ரயில்வே போலிசார், மருத்துவத்துறை க்கு தகவல் கொடுக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

கோவை மாநகரில் சமீபத்தில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது குறித்தான கேள்விக்கு,  பள்ளிகளுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல் சம்பந்தமாக IP Address கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனவும் Microsoft நிறுவனத்தின் உதவியுடன் அந்த பணிகள் மேற்கொண்டு வருகிறோம் எனவும் பதிலளித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments