சுதந்திர மக்கள் கட்சி கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுதந்திர மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவை புரூக் பீல்டு மால் எதிரில் உள்ள சுப வீணா அரங்கில் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட தலைவர் பார்த்திபன் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இதில், தெற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் அருண்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை விருந்தினராக சுதந்திர மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக சமூக நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்ய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது,உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்வதற்கான செயல் முறை திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் விஜயகுமார், புதிய மாற்றத்தை நோக்கி சுதந்திர மக்கள் கட்சி பயணிப்பதாக கூறிய அவர்,எங்கள் கட்சியில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறினார்.
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு,பெண்களுக்கான உரிமை,சமநீதி,சமூக உரிமை,போன்றவைகளுக்காக சுதந்திர மக்கள் கட்சி பாடுபடும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் சுதந்திர மக்கள் கட்சி பல்வேறு நிலை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments