தமிழ் புலிகள் கட்சி சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம் சுப்பலாபுரம் கிராமத்தில் அருந்ததியர் சமுதாய மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கான பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது முற்றிலுமாக அகற்றி தர வேண்டும் என்றும் மணியக்காரன்பட்டி மயானத்தில் சடலங்களை எரிப்பதற்கு தகனமேடை அமைத்து தர வேண்டும் என்றும் மெட்டில் பெட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல கூட சரிவர பாதை இல்லை என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் புலிகள் கட்சி பொறுப்பாளர்களும் மற்றும் அந்தப் பகுதியில் வாழும் பொது மக்களும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களும் தமிழ் புலிகள் கட்சி பொறுப்பாளர்களும்  வட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி உடனடியாக இந்த மனுவிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதில் தமிழ் புலிகள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திரு வீரப்பெருமாள், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கணேசன் வடக்கு மாவட்ட நிதிச் செயலாளர் மதிவேந்தன் புதூர் நகரச் செயலாளர் மாரி வெள்ளை வேந்தன், புதூர் ஒன்றிய செயலாளர் முத்துசாமிபுரம் பாலமுருகன் வேல்முருகன், கிளை பொறுப்பாளர் மாரிசாமி இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களுக்கு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments