கோவை கொடிசியவில் வாகனங்கள் தொடர்பான ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி துவக்கம்!!

தி கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன் சார்பாக வாகனங்கள் தொடர்பான கோவை ஆட்டோ ஷோ எனும் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அக்டோபர் 5 ந்தேதி துவங்கி 7 ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அனைத்து முன்னனி நிறுவனங்களின்  இரண்டு சக்கர வாகனங்கள்,கார்கள், மற்றும் கனரக வாகனங்கள் தொடர்பான அனைத்தும் ஒரே கூரையின் கீழ் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக கண்காட்சி துவக்க விழா தி கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் ஆறுமுகம் மற்றும் கோவை ஆட்டோ ஷோ தலைவர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஏ.வி.நிறுவனங்களின் தலைவர் ஏ.வி்.வரதராஜன் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக பிரிக்கால் நிறுவனத்தின் நிறுவனர் மோகன்,இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். ஐந்தாவது எடிஷனாக நடைபெறும் இந்த கண்காட்சியில் வாகனங்கள் தொடர்பான அனைத்து துறை சார்ந்த நாட்டின் பல முன்னனி நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.

 இந்த கண்காட்சியில் இந்தியாவில் முன்னணியில் உள்ள டொயோட்டா, வோல்க்ஸ் வேகன், ஹுண்டாய்,எம்.ஜி. மோட்டார்ஸ், கியா,டாடா மோட்டார்ஸ், நிஸான்,ஹோண்டா, மகேந்திரா உள்ளிட்ட பல முன்னனி நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.

மேலும் இந்த கண்காட்சியில் பல்வேறு வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள், புதிய மாடல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உயர்தர பேட்டரி மற்றும் ஆயில் தயாரிப்பு நிறுவனங்களும் பங்கேற்று உள்ளன.

நவீன வாகனங்களுக்கான உதிரி பாகங்களும்,வாகன அழகு படுத்துதல் தொடர்பான அரங்குளும் அமைந்துள்ளன.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள கண்காட்சியில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கபடுவார்கள் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments