கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி இளங்கலை சமூக பணி துறை சார்பாக மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கான விளையாட்டு, கலை, பண்பாடு போட்டிகள் நடைபெற்றது...

 

கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி இளங்கலை சமூக பணி துறை சார்பாக  மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக  அவர்களுக்கான  விளையாட்டு, கலை, பண்பாடு போட்டிகள் நடைபெற்றது.

கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியின் (B.S.W.) இளங்கலை சமூக பணி  துறை  சார்பாக ஹாரிஸான் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியின் செயலர் ஆயர் டேவிட் பர்ணபாஸ்,

முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தில் குமார்,ஸ்வதர்மா பவுண்டேஷன் நிறுவனர் அருணா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளில் இருந்தும் மாற்றுத்திறனாளி மாணவ,

மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு, ஆட்டிசம்,மன வளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டு, கலை, பண்பாடு,ஆடல், பாடல் உள்ளிட்ட  போட்டிகளில்  ஆர்வத்துடன் ஒருவருக்கொருவர் தங்களது திறமைகளை காட்டுவதில் முனைப்பு காட்டியது கல்லூரி மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காலை துவங்கி மாலை வரை நடைபெற்ற இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான விழாவில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.இறுதியாக இளங்களை சமூக பணி துறை தலைவர் சாம் லவ்விசன் நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட விருந்தினர்கள்,நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மாணவ,மாணவிகள்,உள்ளிட்ட அனைவருக்கும்  நன்றி தெரிவித்தார்..

-சீனி போத்தனூர்.

Comments