கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற பிரத்யேக அட்வான்ஸ்டு கராத்தே பயிற்சி முகாம்!!

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மை கராத்தே இண்டர்நேஷனல் கராத்தே பயிற்சி மையத்தில் ஐந்து வயது முதல் கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு  தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த மையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவ,மாணவிகள் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கான பிரத்யேக அட்வான்ஸ்டு கராத்தே பயிற்சி முகாம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். அகாடமி பள்ளியில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாக இயக்குனர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கராத்தே கூட்டமைப்பின் துணை தலைவரும் நிஹான் ஷோட்டோகான் கராத்தே சங்கத்தின் இயக்குனர் தலைமை பயிற்சியாளர் ஹன்சி கல்பேஷ் மக்வானா கலந்து கொண்டு கட்டா சண்டை குறித்து பிரத்யேக நுணுக்கங்களை மாணவ,மாணவிகளுக்கு எடுத்து கூறி ,பயிற்சி அளித்தார்.

இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தே கலையின் கட்டா குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொண்டனர். இதில், மை கராத்தே இண்டர்நேஷனல்  பயிற்சியாளர்கள், சிவமுருகன், அரவிந்த், சரவணன், விமல் பிரசாத், ஆல்வின், எட்வின், தேவதர்ஷினி, சாமுவேல் மற்றும்  மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments