கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் நவீன கால அறிவியல் குறித்த கருத்தரங்கம் துவங்கியது!!

கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் நவீன கால அறிவியல் குறித்த கருத்தரங்கம் துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் கல்லூரி மாணவ,மாணவிகள் அறிவியல் தொடர்பான திறன்களை வளர்த்து கொள்ளும் பயற்சி பட்டறைகள் நடைபெற உள்ளன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் "சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம் 21-ம் நூற்றாண்டின் ஆரோக்கியம் மற்றும் சுற்று சூழல் நிலைத்தன்மையின் ஒரு பரிபானம் " குறித்த 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது.

விழாவுக்கு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் டாக்டர் சி. ஏ.வாசுகி தலைமை தாங்கினார். 

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரியின் பேராசிரியர் விஷ்ணுபிரியா வரவேற்று பேசினார்.

செப்டம்பர் 9 ந்தேதி துவங்கி  11-ந் தேதி வரை  3 நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கத்தை லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் பல்கலைக்கழக

பேராசிரியர் கல்பனா சுரேந்தர்நாத் தொடங்கி வைத்தார்  விழாவில் அவர் பேசும்போது, இந்த கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஆறுச்சாமி அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு முற்போக்கு சிந்தனையோடு பயோ டெக்னாலஜி பாடப்பிரிவை இந்த கல்லூரியில் தொடங்கி வைத்தார்.

நான் இந்த உயர்ந்த நிலைக்கு வர காரணம் இங்கு இந்தப் பாட பிரிவை எடுத்து படித்ததன் பலனாக இந்த உயர்ந்த நிலைக்கு வந்துள்ளேன் அதற்காக நிறுவனர் டாக்டர் ஆறுச்சாமி அவர்களை பாராட்ட வேண்டும்

அதேபோன்று இங்கு பயிலும் மாணவ மாணவிகள்இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார் .

முடிவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு)வி. சங்கீதா நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments