ஒரே இடத்தில் கண்ணை கவரும் டிசைன் புடவைகள் மற்றும் வைர நகைகள் விற்பனை கண்காட்சி!!

கோவை தாஜ் விவாந்தா ஓட்டலி்ல் முதன் முறையாக சுமா ஹாரிஸீன்  லீலாவதி பிராண்ட் புடவைகள் மற்றும் அவிரா டயமண்ட்ஸ் நகைகள் கண்காட்சி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் முதன் முறையாக சுமா ஹாரிஸின் லீலாவதி பிராண்ட் புடவைகள் மற்றும் அவிரா டயமண்ட் நகை விற்பனை கண்காட்சி தாஜ் விவாந்தா ஓட்டலில் துவங்கியது.

செப்டம்பர் 13 மற்றும் 14 என இரு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில் பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் மனைவி சுமா ஹாரீஸ் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார்.

கண்காட்சியில், சுமா ஹாரிஸ் சொந்த லீலாவதி நிறுவனத்தின்  பாரம்பரிய சேலைகளை இந்த கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர். சுமார்  2000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள சேலைகள் விற்பனை வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் முதல் மகாராஷ்டிரா,ராஜஸ்தான் ஆகிய மாநிலம் இருந்து சேலைகள் கொண்டு வந்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments