தூத்துக்குடி -புதியம்புத்தூர்- சென்னை இடையே புதிய வழித்தடத்தில் அரசு விரைவுப்பேருந்து இயக்க எம்எல்ஏ சண்முகையா கோரிக்கை!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியூர்களில் கல்வி பயின்று வருகின்றனர். அரசு ஊழியர்கள், மாணவர்கள், ஜவுளி வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு பணிகள் நிமித்தமாகவோ, கல்வி நிமித்தமாகவோ செல்வதற்கு நேரடியாக போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் இங்கிருந்து தூத்துக்குடி சென்று அங்கிருந்து அரசு விரைவு பேருந்துகள் மூலமாக சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் பகுதியில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் அரசு ஊழியர்களும், வியாபாரிகளும், மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் சில பேருந்துகளை புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் குறுக்குசாலை வழியாக சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலமாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சென்னையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.
Comments