உலக சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த வீரர் வீராங்கனைக பாராட்டு!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 4ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியா மலேசியா சிங்கப்பூர் ஶ்ரீ லங்கா வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் சப் ஜுனியர் ஜுனியர் சீனியர் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சார்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இதில் நாடார் நடுநிலைப் பள்ளி 5ம் வகுப்பு மாணவி ஹர்ஷிதா சோலை ஶ்ரீ குத்து வரிசை பிரிவில் தங்கம் பதக்கம், ஆயுத ஜோடி பிரிவில் மற்றொரு தங்க பதக்கமும் வென்றார் கேஆர்ஏ பள்ளி 4ம் வகுப்பு மாணவி அஞ்சனா ஆயுத ஜோடி பிரிவில் தங்க பதக்கமும் கம்புச் சண்டை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் கேஆர்ஏ பள்ளி 1ம் வகுப்பு மாணவர் சஞ்சய் கண்ணா நடுக் கம்பு அலங்கார வீச்சு பிரிவில் வெண்கலப் பதக்கமும் கம்புச் சண்டை பிரிவில் வெண்கலப் வென்றார் மூன்று சப் ஜுனியர் வீரர் வீராங்கனைகளை அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்கள் பாராட்டினார் இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் நகர செயலாளர் விஜயபாண்டியன் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்ஆர்வி கவியரசன் நகர் மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி கிளைச் செயலாளர் சுந்தர் தூத்துக்குடி மாவட்ட அமைச்சுர் சிலம்பம் சங்க செயலாளர் சோலை நாராயணசாமி துணை தலைவர் மாரியப்பன் பொருளாளர் விஎம் வெற்றி கோவில்பட்டி கால்பந்து கழக தலைவர் தேன்ராஜா காமராஜர் பேரவை கோவில்பட்டி நகர தலைவர் ரவிசங்கர் செயலாளர் மதியரசபாண்டியன் ஆசான் எஸ் எஸ் கணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments