தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சிலின் சார்பில் சிருஷ்டி 2024 கண்காட்சி துவக்கம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாடு கிராப்ட் கவுன்சிலின் செயற்குழு மற்றும் உறுப்பினர்களின் தனித்துவமிக்க கண்காட்சியாக சிருஷ்டி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக புகழ்மிக்கதாக இது திகழ்ந்து வருகிறது.
கண்காட்சியில், கைவினைஞர்களும், கலைஞர்களும், நெசவாளர்களும் உருவாக்கிய பொருட்கள் இடம் பெறுகின்றன. உள்நாட்டில் தயாரான கைவினைஞர்கள் திருவிழாவாக இது நடக்கிறது.ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான ஆயத்த ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், துணி வைககள், அரிதான நகைகள் போன்றவை பங்களிக்கின்றன. வாங்கி மகிழ 68 வகையான பொருட்கள் இடம் பெறுவதோடு, அறுசுவை உணவுக்கும் 6 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் ஆவலோடு எதிர்பார்க்கும் சிருஷ், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் கைவினைஞர்களின் நிதி வாழ்வாதரமாக இந்த விழா நடக்கிறது. இதில் கிடைக்கும் நிதியானது, கைவினைஞர்களின் மானியத்துக்கும், ஆண்டுக்கு ஒரு முறை கிராப்ட் கண்காட்சி நடத்தவும் பயன்படுத்தப்படுகிறது. சிருஷ்டியில் ஒவ்வொரு கடையும் ஒரு நல்ல காரணத்துக்காக அமைந்துள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள் தங்களது சொந்த பைகளை எடுத்து வரவும், ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை தவிர்க்கவும் தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் வேண்டுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments