கோவை பி.பி.ஜி.செவிலியர் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகள் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா!!

கோவை  சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. செவிலியர் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகள் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. பி.பி.ஜி.கல்வி  குழுமங்களின்  தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில், தாளாளர்  சாந்தி தங்கவேலு, துணைத் தலைவர் அக்ஷய், பி.பி.ஜி.மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகளின் துறை  இயக்குநர் டாக்டர் அஷ்வின்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. 

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் நாராயணசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது பேசிய அவர்,

கல்லூரியில் பயின்று வெளியே செல்லும் மாணவ,மாணவிகள் என்றுமே தங்களது கல்லூரிகளை நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர்,அவ்வப்போது முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதனால் தங்களது அனுபவங்களை புதிய மாணவர்களுக்கு பகிர்வதோடு அவர்களும் புதிய விஷயங்களை கற்று கொள்ள முடியும் என தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் தங்கவேலு, தனது அயராத உழைப்பு மற்றும் நிறுவனத்திற்கான தொலைநோக்குப் பார்வை குறித்து பேசினார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில்,  சிறப்பு விருந்தினர் டாக்டர் நாராயணசாமி மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலை பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் செவிலியர் கல்லூரியில் 405 இளங்கலை பட்டதாரிகள் மற்றும் 75 முதுகலை பட்டதாரிகள் என 480 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மருத்துவம் சார்ந்த பட்டபடிப்பில் 250 பட்டதாரிகள் பல்வேறு  துறைகளில் பட்டங்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் கேப்டன் டாக்டர் அமுதகுமார், 

செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சித்ரா லிங்கராஜ், மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகள் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ஆண்ட்ரியா, செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் கலைவாணி உட்பட மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.


Comments