நாகம்பட்டி கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்...

 

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்  நடைபெற்றது.  திட்ட அலுவலர் பவானி வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் இராமதாஸ் தலைமையுரை ஆற்றினார். மணியாச்சி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் சிறப்புரை நிகழ்த்தினார். 

அவர் பேசுகையில், இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருப்பது போதைப் பொருள். எந்தவிதமான வயது பாலின பாகுபாடு இன்றி போதைப்பொருளை பயன்படுத்தி வருகின்றனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQகுறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களைடையே அதிகரித்து வருவதாக புள்ளிவிபரம் தகவல் மூலம் அறிய முடிகிறது. கல்வி நிறுவனங்களின் அருகாமையில் எந்த போதைப் பொருளையும் விற்க கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார். 

பசுவந்தனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவீந்திரன் போதைப் பொருளால் வரும் தீங்குகள் பற்றியும், மாணவர்களின் இலக்கு, பட்டம் பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதாக இருக்க வேண்டும் என்றார். முதல்வர் சிறப்பு விருந்தினர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். கருத்தரங்கில் அனைத்து துறை பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-எஸ் நிகில் ஓட்டபிடாரம்..

Comments