தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முன்னோட்ட போஸ்டர்கள் வெளியீடு!!

கோவையில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முன்னோட்ட போஸ்டர்களை தேசிய பாராலிம்பிக் பயிற்சியாளரான கம்போடியா நாட்டை சேர்ந்ந சோக்லீப் சோங் வெளியிட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் இரண்டாவது மாநில தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கத்தின் தலைவர் சரண், ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் பிரேம் குமார்,மற்றும் கோபிநாத்,லோட்டஸ் பவுண்டேஷன் நிறுவனர் சந்தோஷி ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக கோவையில் நடைபெற உள்ள தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதல் போஸ்டரை,கம்போடியா நாட்டை சேர்ந்த முதன்மை பயிற்சியாளர் சோக்லீப் சோங் வெளியிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரா த்ரோ பால் சங்க நிர்வாகிகள் மாநில அளவில் நடைபெற உள்ள இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண்கள் பிரிவில் 22 அணிகளும்,பெண்கள் பிரிவில் 18 அணிகளும் என சுமார் 40 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.

குறிப்பாக கோவையில் முதன் முறையாக இதில் காது கேளாதோர் பிரிவினரும் கலந்து கொள்ள உள்ளதாகவும்,போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மிக சிறப்பான முறையில் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments