கோவையில் நடைபெற்ற மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்,புதிய மாவட்ட தலைமையகம் திறப்பு விழா,புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா என முப்பெரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற விழாவில்,கோவை மாவட்ட தலைவர் கோவை இல்முதீன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் இப்ராஹீம் பாதுஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,சமுதாயத்தில் நலிந்த சமூகத்தினரை காக்கும் விதமாக கட்சி தொண்டர்கள் பாடுபட வேண்டும் என கேட்டு கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தற்போது கலெக்ஷன் டீம் என்ற பெயரில்,சமூகத்தில் நலிந்த பிரிவினரை நோக்கி ஒரு கும்பல் செயல் பட்டு வருவதாக கூறிய அவர்,தொழில் மற்றும் குடும்ப தேவைகளுக்காக கடன் பெற்று சில சூழ்நிலைகளால் கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் ஏழைகளை குறிவைத்து இந்த கலெக்ஷன் டீம் செயல் படுவதாக கூறினார்.
மேலும் நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளையும் விட்டு வைக்காத இந்த கலெக்ஷன் டீம் கும்பலால் பலர் தற்கொலை கூட செய்து வருவதாக வேதனை தெரிவித்தார்.எனவே தமிழக அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் தலையிட்டு இது போன்ற சம்பவங்களை தடுக்க முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சியில், மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் விஷ்ணு லக்ஷ்மணன், ரகு, பாலசுப்ரமணியம், முகமது ஃபாரூக், பிரகாஷ், ராஜா, மோகன்ராஜ், மங்கலம் காதர், அபுதாகிர், செல்லகுமார், புஷ்பமலர், ரஹீம், சந்திரசேகர், நந்தகுமார் உட்பட மாநில மாவட்ட உறுப்பினர்கள் பல்வேறு அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments