இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பதற்கு கலை புதிய பாதையை ஏற்படுத்தி கொடுக்கும்! - ஹிப் ஹாப் தமிழா ஆதி தெரிவிப்பு.

கோவை - 24-08-24

"independent music" என்னும் சுதந்திரமான இசை அமைப்பு ஆல்பங்களை நிறுத்திக் கொண்டது ஏன் - ஹிப் ஹாப் தமிழா ஆதிக்குரியது என்ன..!

இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பதற்கு கலை புதிய பாதையை ஏற்படுத்தி கொடுக்கும் - ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் அதற்கான விழிப்புணர்வை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என ஹிப் ஹாப் தமிழா ஆதி தெரிவிப்பு.

கோவை அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஆதி செய்தியாளர்களை சந்தித்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தான் நடத்தவிருக்கும் இசை நிகழ்ச்சி ( CONCERT)  குறித்து பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது 2018"ஆம் ஆண்டுக்கு பிறகு "independent music" என்னும் சுதந்திரமான இசை அமைப்பு ஆல்பங்களை நிறுத்திக் கொண்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அப்போது பதில் அளித்து பேசிய ஆதி அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வாய்ப்புகள் உருவாக வேண்டும் என்பதற்காகவே அந்த வகை பாடல்கள் வெளியிடுவதை நிறுத்தி விட்டதாகவும் வருங்கால இளைஞர்களுக்கு பாலமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை அடைத்துக் கொண்டு இருக்க வேண்டாம் என்பதற்காக நிறுத்திவிட்டதாக அவர் கூறினார். 

இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பது ஒட்டுமொத்த சமுதாயத்தின் கையில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரது கையிலும் இருப்பது என கூறிய அவர் கலை மூலமாக அதற்கான விழிப்புணர்வை தொடர்ந்து செய்வோம் எனவும் அவர் கூறினார். 

சமீபத்தில் தன்னை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என நினைத்துக் கொண்டு ஒருவர் வாழ்த்து எல்லாம் கூறியது பெருமையாக இருந்தது எனவும் பின்னர் அந்த ரசிகர்களிடம் தான் ரோகித் சர்மா இல்லை எனக் கூறி விட்டு வந்ததாகவும் கூறினார். 

இது தொடர்பாக தனது நண்பர்களும் தன்னை கிண்டல் செய்ததாக ஆதி சுவாரஸ்யமான இவ்வாறு தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பிற்கு முன்பாக  இளைஞர்களுடன் நடனமாடி உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments