சோலையார் அணை அருகே கழிவறையின் அவலம்!!!

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்து செல்லும் சோலையார் அணை பெரியார் நகர் போகும் வழியில் வால்பாறை நகராட்சி அதிநவீன பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டு பயனில்லாமல் உடைந்த நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
lease Subscribe to This Channel to get current news 
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ 

வால்பாறை நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மீண்டும் கழிவறையை புதுப்பித்து அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின்  பயன்பாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும்  சுற்றுலா பயணிகள் வால்பாறை நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சோலையார் அணை பார்ப்பதற்கு போகும் சுற்றுலா பயணிகள் கழிவறை போவதற்கு அவதி அடைந்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு  மீண்டும் அப்பகுதியில் உள்ள கழிவறையை புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments