போதை பொருள் இல்லாத கல்லூரி வளாகம் எனும் தலைப்பில் மாரத்தான் போட்டி!!


கோவையில் தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கம் சார்பாக, போதை பொருள் இல்லாத கல்லூரி வளாகம் எனும் தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆர்வமுடன்  கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் போதை பொருட்களை ஒழிப்போம் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி ஓடினர்.

போதைப் பொருட்கள் இல்லாத வளாகத்தை ஏற்படுத்த, தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கம் சார்பாக, கோவையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இதற்கான துவக்க நிகழ்ச்சியில் , தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குமார் லால் மோகன்,செயலாளர் சேதுபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார். இதில் கௌரவ அழைப்பாளர்களாக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போதைப் பொருள் இல்லாத கல்லூரி வளாகம், போதைப் பொருள் வேண்டாம்,  என சொல்லுங்கள் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு மாரத்தான் நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கிய இதில் கலந்து கொண்டோர் அவினாசி சாலை வழியாக வந்து எஸ்.என்.ஆர்.கல்லூரி வளாகம் வந்தடைந்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கத்தின் செயலாளர் சேதுபதி ஆகியோர், இளம் மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதை பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு இது போன்ற விழிப்புணர்வு தற்போது அவசியம் தேவைப்படுவதாக கூறினர். தொடர்ந்து கல்லுாரி மாணவர்களிடையே போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுமார் 80 கல்லூரிகளில் இருந்தும் 600 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.


Comments