வீடு வாங்க மற்றும் கட்ட விரும்புவர்களின் கனவு இல்லம் நனவாகும் வகையில் கிரெடாய் அமைப்பினரின் ஃபேர் புரோ கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் துவங்கியது..

 

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவையில் வீடு கட்டுவதற்கும் அடுக்கு மாடி,மற்றும் தனி வில்லாக்கள் போன்ற வீடுகளை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடுத்தர மற்றும் உயர் தர என  ஒவ்வொருவரது கனவு இல்லத்தை நனவாக்கும் வகையில்  ஏராளமான கட்டுமான நிறுவனங்கள் துறை சார்ந்த அனைத்து தகவல்களும் ஒரே கூரையில் கிடைக்கும் விதமாக கோவை கொடிசியா வளாகத்தில் கிரெடாய் அமைப்பின் சார்பாக ஃபேர் புரோ 2024 கண்காட்சி துவங்கியது.. ஆகஸ்ட் 2 ஆம் தேதி  3 நாட்களுக்கு நடைபெறும் இந்த  கண்காட்சியில் 30 க்கும் மேற்பட்ட வீட்டுமனை,அடுக்கு மாடி,மற்றும் வில்லாக்கள் கட்டி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள்  அரங்குகளை அமைத்துள்ளனர். 

வீடு வாங்குபவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நடைபெறும் இந்த கண்காட்சி துவக்க. விழா,கிரெடாய் அமைப்பின்  நிர்வாகிகள் சுரேந்தர் விட்டல்,அரவிந்த் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இதில், இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக குகன் IAS, உட்பட கிரடாய் அமைப்பினர் கலந்து கொண்டனர்.மேலும் இங்கு முன்னனி வங்கிகள் ப்ளாட்கள், வில்லாக்கள், கேட்டேட், கம்யூனிட்டிகள், வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வாங்குவதற்கு கடன் உதவிகளுக்கான வழிவகைகளை செய்து தருகின்றனர். அதே போல் இந்த 3 நாட்களுக்கு ஏதாவது ஒரு சலுகைகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-சீனி, போத்தனூர்.












 


Comments