'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தித்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!

ஏரல் அருகே குரங்கணி பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலையை மாவட்ட ஆட்சியர் சுமார் ஒரு அடி தூரம் வரைக்கும் தோண்டி ஆய்வு செய்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தில் ஏரல் வட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், நட்டாத்தி ஊராட்சி நூலகம், நட்டாத்தி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலை கடை கட்டுமானப் பணிகள், நட்டாத்தி ஊராட்சி கொம்புக்காரன் பொட்டல் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளை ஊரக வளர்ச்சித்துறை மூலம் தற்பொழுது புதிதாக கட்டப்பட்டு வருவதையும், நட்டாத்தி ஊராட்சி கொம்புக்காரன் பொட்டல் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, பெருங்குளம் இரண்டாம் நிலை பேரூராட்சி உண்டியலூர் வடக்கு தெருவில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த வீடு தற்பொழுது புதிதாக கட்டப்பட்டு வருவதையும், உண்டியலூர் வடக்கு தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின், ஏரல் ஆற்றுப்பாலம் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதமடைந்து தற்பொழுது நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்பட்டு வருவதையும், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் குரங்கணி ஊராட்சியில்,ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குரங்கணி புறவழிச்சாலையின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மாவடிப்பண்னை அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் சுவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்பு, தென்திருப்பேரை பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுகாதார மையம் மற்றும் ஆய்வக கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்திருப்பேரை பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள உள்நோயாளி பிரிவினை பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். வெள்ளரிக்காயூரணி கண்மாயில் புதிதாக நிரந்தர மதகுகள் கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வெள்ளமடம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் சார்பில் பயிற் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, ஏரல் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து துறை சார்நத அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments