'சமவெளியில் மர வாசனை பயிர்கள்' எனும் கருத்தரங்கை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்க உள்ளார்!!

கோவை:ஈஷா காவேரி கூக்குரல் சார்பாக,வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ள  'சமவெளியில் மர வாசனை பயிர்கள்' எனும்  கருத்தரங்கை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்க உள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு  திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இக்கருத்தரங்கை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்  சாமிநாதன் துவங்கி வைக்கிறார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைப்பெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர்  தமிழ்மாறன்   வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் குமார் ஆகியோர் இணைந்து பேசினர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்க உள்ள இந்த கருத்தரங்கில்,ஆழியாறு அறிவு திருக்கோவிலின் அறங்காவலர்  பச்சையப்பன் முன்னிலை வகிக்க உள்ளதாகவும்,சிறப்பு விருந்தினர்களாக கேரள மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ,தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மருத்துவர் துரைசாமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும் என்று சொல்லப்படும் மரவாசனைப் பயிர்களான ஜாதிக்காய், லவங்கப்பட்டை, சர்வ சுகந்தி (பிரியாணி இலை), கிராம்பு, அவகோடா ஆகியவை தகுந்த சூழலை உருவாக்கினால் சமவெளியிலிலும் தரமான முறையில் விளைவிக்க முடியும். மரவாசனை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை வெகுவாக அதிகரித்துக் கொள்ள முடியும்.இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தவும், சாகுபடி நுணுக்கங்கள், அதன் பராமரிப்பு முறைகள் மற்றும் முன்னோடி வெற்றி விவசாயிகளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யபட்டு உள்ளதாக கூறினர்.தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த நிபுணர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள்  கலந்து கொள்ள உள்ள இந்த கருத்தரங்கை ஈஷாவுடன், இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் ( இந்திய மசாலா வாரியம் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்  ஆகிய மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து நடத்துவதாக தெரிவித்தனர்.

தென்னை, பாக்கு, மற்றும் டிம்பர் மர விவசாயிகள் அதிக அளவில் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற காவேரி கூக்குரல் அழைப்பதாகவும்,மேலும் கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90081, 94425 90079 என்ற எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments