பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய திருமண தம்பதிகள்,!!

கோவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதை பழக்கம் ஆகியவற்றிக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய திருமண தம்பதிகளின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்றைய தினம் அர்ஷத்- ஃபஹீமா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

இதில் மணமக்களும் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட உறவினர்களும் "Say No To Drugs", "Hang the Rapist", "Republic? Or Rape Public?" என்ற பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

தற்பொழுது அந்த புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வைரலாகி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மணமக்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments