காட்டுயானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புகுவதை தடுக்கும் முயற்சி வெற்றி!!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய வனச்சரகங்கள் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி அலையும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அதனை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய விளை பொருள்களை சேதப்படுத்தி வருகின்றன. ஒரு சில நேரங்களில் வனவிலங்குகளால் மனிதர்கள் உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை தடுக்க வனத்துறையினர் பல வழிகளை மேற்கொண்டாலும்  வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்கும் நுழைவது தொடர் கதையாகவே உள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கெம்மராம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பமான ஏ. ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியில் வெற்றி என தெரிவித்துள்ளனர்.

வனவிலங்குகள் நுழைந்தால் ஒலிபெருக்கியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சைரன், பழங்குடி இன மக்கள் எழுப்பும் ஒலியின் சப்தம், ஜே. சி. பி. இயந்திரத்தை இயக்கும்போது ஏற்படும் சப்தம்  உள்ளிட்ட பல்வேறு சத்தம் தானாகவே ஒலிக்கிறது, இந்த ஒலியின் சத்தத்தை கேட்ட வனவிலங்குகள் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments