ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கோவைபுதூர் கிளை அலுவலகம் மற்றும் கோவை மண்டல புதிய அலுவலகம் துவக்க விழா!!

கடந்த  1969 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, ரெப்கோவங்கி, வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக  சேமிப்பு கணக்கு, தங்க நகை கடன், நுண் கடன் வசதி வீட்டு கடன் வசதி என பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ரெப்கோ வங்கியின் ஒரு அங்கமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வீட்டு கடன் வழங்கும் திட்டங்களில் செயல்பட்டு வருகிறது..

இந்நிலையில், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக கோவையில் புதிய மண்டல அலுவலகம் மற்றும் கோவைபுதூர் பகுதியில் புதிய கிளையை துவக்கி உள்ளனர். முன்னதாக கோவைபுதூர் மகாத்மா காந்தி சாலையில் துவங்கப்பட்டுள்ள புதிய  கிளையை ரெப்கோ வங்கியின் இயக்குனர், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் தங்கராஜ் திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை தொடர்ந்து அவர், நஞ்சுண்டாபுரம் பகுதியில் செயல்பட உள்ள  புதிய மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார். தலைமை வளர்ச்சி அதிகாரி வைத்தியநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,கோவை மற்றும் சேலம் மண்டல வளர்ச்சி மேலாளர் முரளிதரன், கோவை மண்டல மேலாளர் சிபி, கோவை புதூர் கிளை மேலாளர் யோகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

விழாவில் பேசிய , ரெப்கோ வங்கியின் இயக்குனர் தங்கராஜ், மிக வேகமாக வளரந்து வரும் தொழில் நகரான கோவையில் தங்களது சேவையை விரிவு படுத்தும் விதமாக புதிய மண்டல அலுவலகம் மற்றும் புதிய கிளையை துவங்கி உள்ளதாகவும், இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு ரெப்கோ வீட்டு கடன் வசதி திட்டத்தில்  ஏராளமானோர் பயனடைந்து வருவதாக தெரிவித்தார். புதிதாக துவக்கப்பட்டுள்ள புதிய  கிளை, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை புரியும் என அவர் கூறினார்.

-சீனி, போத்தனூர்.

Comments