இலங்கை கடற்படையினரால் தருவைகுளம் மீனவர்கள் கைது - எம்எல்ஏ சண்முகையா நேரில் ஆறுதல்...

 

ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளம் கிராமத்தில் இருந்து கடந்த 21 மற்றும் 23ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற தருவைகுளம், வேம்பார், மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை கடந்த ஐந்தாம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுதலை செய்யவும் மற்றும் இரண்டு விசைப் படகுகளை மீட்டு தர வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதிமீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பாமரிப்புத்துறை அமைச்சர் அனிதா  ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் விரைந்து நடவடிக்கை  எடுக்குமாறு வலியுறுத்தினார்கள். 


தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவ  கிராமத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தமிழ்நாடு அரசு கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார்.


நிகழ்ச்சியில் திமுக அவைத் தலைவர் மனோகரன், மீனவர் சங்க தலைவர் லூர்துராஜ் அன்புராஜ் விசைப்படகு சங்க தலைவர் புகழ் கென்னடி அந்தோணி சுரேஷ்  மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் நிக்குலஸ் கிளை செயலாளர்கள் தயாளன், ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.

Comments