கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ராதா பாலாமணி டிராபி கோ கோ போட்டி! எழுபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்!!
கோவை வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மற்றும் கோயமுத்தூர் மாவட்ட கோ கோ அசோசியேசன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான ராதா பாலாமணி டிராபி கோ கோ சாம்பியன்ஷிப் போட்டி தொட்டிபாளையம் பிரிவில் உள்ள வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற இதில், .மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனி அணிகளாக விளையாடினர். போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த எழுபதிற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக போட்டிகளை பள்ளியின் தாளாளர் பிரதேவ் ஆதிவேல், கோயமுத்தூர் மாவட்ட கோ கோ ஆண்கள் மற்றும் பெண்கள் அசோசியேசன் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். நாக் அவுட் போட்டிகளாக நடைபெற்ற போட்டிகளில் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில்,எம்.டி.என்.பள்ளி முதலிடத்தையும், கோவை வித்யா மந்திர் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
மாணவியர் பிரிவில் எம்.டி.என்.முதல் இடத்தை பிடித்தது. 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் எம்.டி.என் முதல் இடத்தையும்,மாணவியர் பிரிவில் டி.என்.ஜி.ஆர்.பள்ளி முதலிடம் பிடித்தது. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகள் மற்றும் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-சீனி, போத்தனூர்.
Comments