50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் : படந்தபுளி மக்கள் மகிழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமத்திற்கிடையே சென்று வருவதால் அங்கு பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், படர்ந்தபுளி கிராம மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து படர்ந்தபுளி கிராமத்தில் பாலம் கட்டுவதற்கு இன்று பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் ஒப்பந்ததாரரிடம் மழைக்காலம் வருவதற்கு முன்பாகவே பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்று யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்வில், ஊராட்சி மன்ற தலைவர் சோலை ராஜ், துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, ஊர் தலைவர் கருப்பசாமி, ஒப்பந்ததாரர் ஜெயபால், அதிமுக கழகப் பேச்சாளர் இளங்கோ, கவுன்சிலர் ஆண்டாள் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments