2 குழந்தைகளுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை...!! பொள்ளாச்சி அருகே சோகம்!!!
கோவை பொள்ளாச்சி அருகே தாத்தூர் கிராமத்தில் இரண்டு குழந்தைகளுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் உள்ள தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக பணி செய்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா (வயது 30). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. மகள் தனுஸ்ரீ (வயது 7) தனியார் பள்ளியில் 2ம் வகுப்பும், மகன் அகிலன் (வயது 4) Free KG படித்து வந்தனர்
இந்த நிலையில் அருண்குமார் வேலைக்கு சென்று விட்டார். வழக்கம் போல தாய் சுகன்யா, தன் இரு குழந்தைகளையும் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பள்ளிக்கு குழந்தைகள் வராததால், பள்ளியில் இருந்து அருண்குமாருக்கு குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை என தகவல் கூறப்பட்டு உள்ளது.
இதனால் அருண்குமார் தன் வீட்டுக்கு வந்துள்ளார் வரும் வழியில் கிணற்றின் அருகே மனைவியின் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்ததை கண்டு உள்ளார். பின்னர் கிணற்றில் பார்த்தபோது சுகன்யா மற்றும் குழந்தைகள் தண்ணீரில் மிதந்தது கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர், இறந்த நிலையில் இருந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments