கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா!!
காமராஜரின் வேடமணிந்த 122 சிறுவர்,சிறுமிகள், மைதானத்தில் காமராஜரின் உருவமாக தத்ரூப அணிவகுப்பு நடத்தினர். காமராஜரின் பிறந்த தினத்தை கல்வியின் பெருமை மற்றும் அவசியம் குறித்து மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளும் விதமாக கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம், கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் கா்ம வீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 122 சிறுவர்,சிறுமிகள் கல்வி கண் திறந்த காமராஜரை நினைவு கூறும் விதமாக அவரை போல வேடமிட்டு இருந்தனர்.
சிறுவர்களுக்கு போட்டியாக சிறுமிகளும் வெள்ளை சட்டை,வேஷ்டி,தோளில் துண்டுடன் வெள்ளை மீசையுடன் தத்ரூபமாக காமராஜரை போல வேடமிட்டபடி வந்தனர்.
தொடர்ந்து பள்ளி மைதானத்தில் 122 குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக வலம் வந்து, காமராஜர் ஓவியமாக தத்ரூபமாக அணிவகுத்து நின்றனர். தொடர்ந்து அனைவரும் கல்வி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆஸ்ரம் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன், மற்றும் கவுரி,நிர்வாகி உதயேந்திரன்,செயலாளர் ரவிக்குமார்,வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா,பள்ளி முதல்வர் சரண்யா உட்பட ஆசிரிய,ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments