கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக அத்லெட்டிக் டேலன்ட் ஃபைண்ட் எனும் மாநில அளவிலான அத்லெட்டிக் போட்டிகள் கோவையில் துவங்கியது!!
கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில அளவிலான அத்லடிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
அதன்படி,ஆறாவது ஆண்டாக, அத்லெட்டிக் டேலண்ட் ஃபைண்ட் (Athletic Talent Find) என்னும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
முன்னதாக இதன் துவக்க விழா கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் பரசுராம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநர் மூத்த வழக்கறிஞர், சுந்தரவடிவேலு கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி தலைவர்,டாக்டர் உமா பிரபு,,வழக்கறிஞர் பிரபுசங்கர் வழக்கறிஞர் ,வியன் வீணை குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் ரோட்டரி கிளப் பல்வேறு நிலை நிர்வாகிகள் சந்தோஷ், பிள்ளை, ராஜாமோகன், ராஜசேகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில்,சென்னை,மதுரை,திருச்சி, கோவை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஜூனியர்,சீனியர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 100 மீட்டர் முதல் ஆயிரத்து 500 மீட்டர் வரையிலான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் தேர்வு செய்யப்படும் தடகள வீரர் வீராங்கனைகள் அடுத்து நடைபெற உள்ள மாநில,தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி பரசுராம் தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.
Comments