இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பு சார்பாக கோவையில் பெண்களுக்கான தையல் பயிற்சி மையம்!!
இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பு சார்பாக கோவையில் பெண்களுக்கான தையல் பயிற்சி மையம் மற்றும் பெண் தொழில் முனைவோர்களுக்கான ரெட் ஜி இணைய தளம் துவங்கப்பட்டது.
தையல் துறை தொடர்பான பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெண்களுக்கு உருவாக்கும் விதமாக ,கோவை உக்கடம் பகுதியில், இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பின் பிரத்யேக அலுவலகம் துவங்கப்பட்டது.இதற்கான திறப்பு விழாவில், கோவை டாக்டர் ஜி.எம்.ரபீக் தலைமை வகித்தார்.
அமுதம் மகேஷ்,குரு நாகலிங்கம்,சுரேஷ் மார்டின்,சிவகாம சுந்தரி,கலையரசி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக, காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் எஸ்.எம்.. இதயத்துல்லா மற்றும் , தமிழக தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக கலந்து கொண்ட ,சமூக நீதி கூட்டமைப்பின் கவுரவ ஆலோசகர் முகமது கலீமுதீன்,அக்வாய் அமைப்பின் நிறுவன தலைவர் ராணா ரபீக் ஆகியோர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் பெண்கள் தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு வாய்ப்பு வழங்கும் விதமாக ரெட் ஜி எனும் இணையதளத்தை சிறப்பு துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் பெண்களுக்கு தையல் பயிற்சியும் அளித்து மேலும் வேலை வாய்ப்புகளை வழங்கும் இது போன்ற திட்டங்களால் நாட்டின் வளர்ச்சியில் பெண்களுக்கு அதிகம் பங்கு இருக்கும் என குறிப்பிட்டனர்.மேலும் தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள நெகிழி இல்லா தமிழகம் என்ற திட்டத்திற்கு இங்குள்ள பெண்கள் செய்யப்போகும் ஒரு இலட்சம் மஞ்சப்பை தயாரிக்கும் உலக சாதனை திட்டம் நல்லபடியாக நடந்தேற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினர்.
இந்நிகழ்ச்சியில், அழகேசன் முன்னாள் வாரிய செயலாளர் ஏ ஜே நாகராஜ், இன்ஜினியர் ஆர் ராஜதுரை ஏ அருள்தாஸ் இராம வெங்கடேஷ் எ பாலகிருஷ்ணன் பிகே ஆறுமுகம், அக்வாய் அமைப்பின் சார்பாக மாநில பொதுச்செயலாளர் வெங்கட், அக்வாய் இதழ் இணை ஆசிரியர் அண்ணன் கவிக்குயில். இரா. கணேசன், மதுரை மாவட்ட தலைவர் பாட்ஷா, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலாவுதீன், திருப்பூர் மாவட்ட அக்வாய் நிர்வாகிகள் அருணாச்சலம், மகாலிங்கம், கோவை மாவட்டம் ஹக்கீம்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments