போலீஸ் என கூறி வாலிபரை மிரட்டிய கண்டக்டர் கைது!!!

கோவை, சுகுணாபுரம் ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜக்கரியா. இவரது மகன் அசாருதீன் (29). இவர் இரு சக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டு அருகில் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க நபர் காக்கி உடையில் வந்தார். அசாருதீன் மற்றும் அவரது நண்பர்களிடம், ‘‘ஏன் இங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? , என்ன செய்கிறீர்கள்? ’’ என மிரடட்லாக கேட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடனே அசாருதீன், ‘‘நீங்கள் எப்படி கேள்வி கேட்கலாம்? ’’ என கேட்டார். அதற்கு அந்த நபர், ‘‘நான் போலீஸ். என்னை எதிர்த்து பேசுகிறாயா? ’’ என கூறி மிரட்டினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்த அசாருதீனின் தந்தை ஜக்கரியா காக்கி உடை அணிந்த நபரிடம் விசாரித்தார்.

அப்போது அந்த நபர் உண்மையில் போலீஸ் இல்லை என்பது தெரியவந்தது. அவர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பதும், அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருவதும் உறுதியானது. இதையடுத்து போலீஸ் என நடித்து வாலிபரை மிரட்டியதாக குனியமுத்தூர் போலீசில் சிவக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிவக்குமாரை கைது செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments