குழந்தைகள் மேம்பாட்டு மையத்தின் துவக்கவிழா நடைபெற்றது!!

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஹெல்த் பேசிக்ஸ் ஆரம்பகால மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையத்தின் துவக்கவிழா நடைபெற்றது. இதனை சங்கரா கண் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் பத்ம ஸ்ரீ டாக்டர் ரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஹெல்த் பேசிக்ஸ் ஆரம்பகால மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை சங்கரா கண் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் பத்ம ஸ்ரீ டாக்டர் ரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் இம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது...

குழந்தைகள் அந்தந்த வயதில் செய்ய வேண்டிய பணிகளை அந்தந்த கால கட்டங்களில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக பிறந்த குழந்தை 6 மாதங்களிலும் ஒரிருவார்ததைகளை உச்சரிக்க பழக வேண்டும், 11 மாதங்களில் குறுநடை போட வேண்டும், 1வயதில் நமது உச்சரிப்புகள், நம்மை பார்த்து சிரிப்பது பேச முயல்வது என அடுத்தடுத்த செயல்களை செய்ய வேண்டும் அவ்வாறு செய்யாமல் மாற்று செய்கைகளை செய்யும் குழந்தைகளை ஆட்டிசம் குறைபாடுகள் உள்ள குழந்தை என கூறுவார்கள். இவ்வாறான குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கும் பருவம் குழந்தை பருவம் இந்த பருவத்தில் இருந்து இந்த குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தினால் வாழ்கையில் இவர்களும் நம்மை போன்ற சக மனிதர்களாக மாற முடியும். இவ்வாறான ஸ்பெஷல் குழந்தைகளை கவனிக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்யும் நோக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இனைந்து இம்மையம் துவங்க பட்டுள்ளது. இம்மையத்தில் குழந்தைகளுக்கு கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பலுவேறு பயிற்சிகளை வழங்க சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த துவக்கவிழா  நிகழ்ச்சியில், எஸ்என்ஆர் அன் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், எஸ்என்ஆர் அன் சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை நடவடிக்கை அதிகாரி சுவாதி ரோகித், கோவை மாவட்ட ப்ளே ஸ்கூல் உரிமையாளர்கள் சங்க தலைவர் கௌதமன், மற்றும் மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், உளவியலாளர்கள், பேச்சு சிகிச்சையாளர்கள், தொழில் சார் சிகிச்சையாளர்கள், உள்ளிட்ட நிபுணர் குழுவினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments