பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்ட நிதியால் நாட்டின் பெண்களின் தொழில் திறன் மேம்பட வாய்ப்பு!!

 

மத்திய பட்ஜெட்டில் நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்,இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அனைத்து மகளிர் தொழில் முனைவோர்  அமைப்பினர் கோவையில்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் உள்ள அனைத்து மகளிர் தொழில் முனைவோர் அமைப்பினர், தொழில் முனைவார்களாக ஆக விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில்,திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து அனைத்து மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.இதில் சங்கத்தின் நிறுவனர் ராதா பெல்லன்,தலைவர் இந்திரா மற்றும் செயலாளர் தாரா பிரசாத் ஆகியோர் பேசுகையில், 

மக்களவையில், வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூபாய் 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்பதாக கூறிய அமைப்பினர், இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றிகளை உரித்தாக்குவதாக தெரிவித்தனர். இதனால் வேலைவாய்ப்பு, திறன் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி குறிப்பாக பெண் தொழில் முனைவோர்கள் அதிகம் பயனடைவார்கள் என தெரிவித்தனர்.

அண்மையில் கோவை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதராமனை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்ததாகவும்,இந்த பட்ஜெட்டில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் தற்போது மத்திய அரசு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்காக  ஒதுக்கியுள்ள இந்த நிதியில்,தமிழகத்திற்கு அதிக அளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments