ஐ.பி.எல் கிரிக்கெட் போன்று இனி பி.பி.எல் குதிரையேற்றம் போட்டி இருக்கும்..! - நடிகர் பிரசாந்த் கோவையில் பேட்டி!!

உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் குறித்து லோகோ வெளியீடு நிகழ்ச்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. 

இதில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,நடிகர் பிரசாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு லோகாவை வெளியிட்டனர்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரசாந்த்,

ஹிஸ்டரி மேக்கிங் என்று நான் சொல்லுவேன்.கிரிக்கெட் டில் ஐ.பி.எல் போன்று இனி பி.பி.எல் இருக்கும், இதனை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளன ர்.சாதாரண மக்களும் குதிரை ஏற்றம் போன்றவை இருக்க வேண்டும்.சின்ன வயதில் இருந்து குதிரை விளையாட்டு எனக்கு பிடிக்கும். என்னுடைய படங்களிலும் குதிரைகளை கொண்டு வந்து விடுவேன். குதிரை எனக்கு பிடித்த விலங்கு.தமிழர்கள் ஒரு செயலை செய்யும் போது அதை ஆதரிக்க வேண்டும்.

தான் நடித்த அந்தகன் படம் ஆகஸ்ட் மாதம் வெளியீட உள்ளது. அந்தகன் படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள். கோட் படம் பண்றது காரணமாக மூன்று பேருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். கடந்த காலங்களில் மல்டி ஸ்டார் படம் செய்து உள்ளேன்.தமிழ் சினிமாவில் ஆரோக்கியமாக போட்டி நல்லது.

என் மீது அன்பு கொண்ட ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.குதிரை யார் வேண்டுமானால் ஒட்டல்லாம். போலோ விளையாட்டு அப்படி கிடையாது.போலோ இப்போது தான் அமைகிறது. விரைவில் பார்ப்பீர்கள்.

நல்ல கதை இருந்தால் முழு நேர காமெடி படம் செய்ய தயார்.எனது அப்பா திறமையான இயக்குநர் ,டெக்னாலஜி கற்றுக் கொண்டு அதை படத்தில் பயன்படுத்தியுள்ளார்.2026 அரசியல் பயணம் அப்பறம் பேசலாம். செலபரிட்டி  போலோ நடந்தால் நான் தான் அதில் கேப்டன். 

ஒரு படம் எல்லாருக்கும் பிடிக்கணும் என்பது இல்லை. இந்தியன் 2 படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் அது அவர்களின் கருத்து. கருத்து யார் வேண்டுமானல் சொல்லலாம்.2026ல் மக்களுக்கு யார் நல்லது பண்றாங்களோ அவர்களுக்கு ஆதரவளிப்பேன் என தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments