தங்க,வைர நகை ஆபரணங்களுக்கென கோவையில் போத்தீஸ் ஸ்வர்ண மகால் ஐந்தாவது கிளை துவக்க விழா நடைபெற்றத!!.
கோவை ஒப்பணக்கார வீதியில் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தனது புதிய கிளையை துவங்கியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திருநெல்வேலி, சென்னை, திருச்சி, திருவனந்தபுரத்தை தொடர்ந்து 5 - வது கிளையாக கோவையில் தங்கம்,வைரம்,வெள்ளி ஆபரண விற்பனை மையத்தை போத்தீஸ் ஸ்வர்ணமஹால் தனது புதிய கிளையினை துவக்கி உள்ளது.புதிய கிளையை, போத்தீஸ் நிறுவனத்தின் இயக்குநர் S. ரமேஷ் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், போத்தீஸ் குழுமத்தின் இயக்குநர்கள் போத்தி ராஜ் ,முருகேஷ் அசோக் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் துணை தலைவர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
திறப்பு விழா சலுகையாக தங்கம் சவரனுக்கு ரூ 1000/- மற்றும் வைரம் காரட்டிற்கு ரூ 10000/- சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என போத்தீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் தெரிவித்தார்..புதிதாக துவங்கப்பட்ட, போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தங்க நகைக்கடையில் வாடிக்கையாளர்களின் மனதை ஈர்க்கும் வகையில் பல்வேறு டிசைன்களில் தங்க நகைகள்,வைர நகைகள்,மற்றும் வெள்ளி பொருட்கள் ஏராளமாக விற்பனைக்கு அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் திருமணம், பிறந்தநாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு பொருத்தமான தங்க நகைகள் பிரத்யேகமான டிசைன்களில் வைக்கப்பட்டுள்ளன.
-சீனி, போத்தனூர்.
Comments