கோவையில் நடைபெற்ற அக்ரி இண்டெக்ஸ் கண்காட்சி!!!
கோவையில் நடைபெற்ற அக்ரி இண்டெக்ஸ் கண்காட்சியில் பிரீமியர் பைப் நிறுவனத்தின் அரங்கை விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஹோம் கார்டன் Drip Kit குறித்து கேட்டறிந்தனர்.
கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பி.வி.சி தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னனி நிறுவனமாக பிரீமியர் பைப்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
வீட்டு உபயோகம், தொழிற்சாலைகள்,விவசாய பயன்பாடுகள்,உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் தேவையான தரமான எச்.டி.பி.இ.மற்றும் பி.வி.சி. குழாய்கள், தண்ணீர் தொட்டிகள், கார்டன் ஹோஸ், உறிஞ்சும் குழாய், சொட்டு நீர் பாசன பக்கவாட்டு குழாய்கள் மற்றும் அது தொடர்பான பொருட்கள் ஆகியவற்றை தங்களது சொந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கொடிசியாவில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் பிரீமியர் பைப்ஸ் நிறுவனம் தனது பிரம்மாண்ட அரங்கில் நிறுவனத்தின் அனைத்து விதமான தயாரிப்புகளையும் காட்சி படுத்தியிருந்தனர்.
இந்திய அளவில் நடைபெற்ற அக்ரி இண்டெக்ஸ் கண்காட்சிக்கு வந்த ஏராளமான பார்வையாளர்கள் பிரீமியர் நிறுவனத்தின் தயாரிப்புகளை கண்டு வியந்தனர். இது குறித்து இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் பிரகதீஷ் மற்றும் வர்ஷா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது வீட்டில் இருப்பவர்களே தரமான காய்கறிகளை உற்பத்தி செய்யும் விதமாக ஹோம் கார்டன் Drip Kit எனும் புதிய கோட்டை அறிமுகம் செய்துள்ளதாகவும்,இதனை கொண்டு வீட்டில் நல்ல தோட்டத்தை அமைக்க முடியும் என தெரிவித்தனர்.
மேலும் பி.வி.சி.தொடர்பான அனைத்து விதமான பைப்,தண்ணீர் டேங்குகள் விவசாய சொட்டுநீர் பாசனத்திற்கு தேவையானவை என அனைத்தும் சொந்த உற்பத்தியில் தரமாக தயாரித்து நாடு முழுவதம் விநியோகம் செய்து வருவதாக தெரிவித்தனர்.
-சீனி, போத்தனூர்.
Comments