தேமுதிக கழகம் கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது!!
கோவை:தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழக அலுவலகம் திறப்பு விழா பீளமேடு பகுதி கழக செயலாளர் வி. பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையிலும் பகுதி அவைத்தலைவர் G சக்திவேல் பகுதி கழக பொருளாளர் சிட்டி கே ராமச்சந்திரன் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் ஏற்பாட்டிலும் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே. சந்துரு அவர்கள் தலைமையில் பீளமேடு பகுதி கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பீளமேடு பகுதி கழக அலுவலகத்தை ரிப்பன் வெட்டி அவரது திருகரங்களால் திறந்து வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னதாக பட்டாசு வெடித்து தேமுதிக கழக கொடியேற்றி மாற்று கட்சியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கழக பொது செயலாளர் முன்னிலையில் நமது கட்சியில் இணைத்துகொண்டனர் மேலும் பொதுமக்களும் பிரியாணி வழங்கப்பட்டது மேலும் புதிய ஆட்டோ மற்றும் நலத்திட்ட. உதவிகளை வழங்கி சிறப்புறையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள்,பீளமேடு பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் வட்டகழக செயலாளர்கள்,வட்டகழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ,மகளிர் அணியினர் மற்றும் ஏராளமான தேமுதிகவினர் கலந்துகொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments