கோவையில் 28 ஆம் ஆண்டாக தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது!!

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகம் சார்பாக 28 ஆம் ஆண்டு தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ஆர்.நினைவு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

முன்னதாக இதன் துவக்க விழா பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவன் தலைமையில் நடைபெற்றது. தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகத்தின் தலைவர் அமிர்தராஜ்,செயலர் விஜயகுமார் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விழாவில்,

ஸ்டார் நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் செந்தில் நாதன் முன்னிலை  வகித்தார். சேரிபாளையம் அரசு பள்ளி,உடற்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக, வெள்ளலூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ் செல்வன்,ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி உதவி பேராசிரியர் பாலசுந்தர்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஹோப்ஸ் வாக்கர்ஸ் கிளப் செயலர் மௌனசாமி எல் சி சி நிறுவனத்தின் பொது மேலாளர் காந்தி ராஜ் ஆகியோர் கொடியேற்றி போட்டிகளை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், கனகராஜ்,கோகுலகிருஷ்ணன், சொக்கலிங்கம்,தினேஷ் குமார், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டிகளில்  கோவை,பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, அரசு,மற்றும் அரசு உதவி பெறும் பள்ளீகள்,தனியார் பள்ளிகள் என 80 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 2500 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

கூடைப்பந்து,கைப்பந்து,கோகோ,கபடி,மற்றும் பூப்பந்து என ஐந்து வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. 14,17, மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.

பள்ளிக்கல்வி துறை சார்பாக நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தயார் செய்யும் நிலையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments