கோவையல் 23 வது தேசிய ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டி!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில் தேசிய அளவிலான 23 வது வூசு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
தேசிய அளவிலான போட்டியாக கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ள நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய வூசு சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி சுஹைல் அஹமது,கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன்,தமிழ்நாடு வூசு சங்கத்தின் தொழில் நுட்ப இயக்குனர் ரவி,பொது செயலாளர் ஜான்சன்,ஆகியோர் பேசினர்.
ஐந்து நாட்கள் நடைபெற உள்ள போட்டிகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம்,மணிப்பூர் ,மகாராஷ்டிரா,கேரளா,தமிழ் நாடு என நாடு முழுவதும் இருந்து சுமார் 1300 வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
சான்சூ மற்றும் டவ்லு ஆகிய இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட இருப்பதாகவும் இதில் முதல் இடம் பிடித்து தேர்வு செய்யப்படும் மாணவ,மாணவிகள் நடைபெற உள்ள தெற்காசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள் என தெரிவித்தனர்.
குறிப்பாக இதில் தேசிய அளவிலான விருதுகள் பெற்ற முன்னனி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறினர்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு வூசு சங்கத்தின் பொருளாளர் கோபி,கோவை மாவட்ட தலைவர் கணேசன்,கே.பி.ஆர்.கல்லூரி உடற்பயிற்சி இயக்குனர்கள் செந்தில் குமார்,முத்துலட்சுமி,ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.
-சீனி, போத்தனூர்.
Comments