மத்திய அரசின் 2024-25 பட்ஜெட் பட்டய கணக்காளர்கள் வரவேற்பு!!

அண்மையில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட் ஜி.எஸ்.டி. சிறு குறு தொழில் துறையினருக்கு பல சாதக அம்சங்களை வழங்கியுள்ளதாக பிரபல Zen Tax Clinic  மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் (Zen Tax Clinic)எனும் நிறுவனம் ஜி.எஸ்.டி.உள்ளிட்ட தொழில் துறையினரின் வரிகள் சார்ந்த தீர்வுகளுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அண்மையில் புதிதாக பதவியேற்ற  மத்திய அரசின் முதல் பட்ஜெட் அறிவிப்பில் தொழில் துறை சார்ந்த பயன்கள் குறித்த கருத்தரங்கம் கோவை பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் சிறு,குறு தொழில் துறையினர்,பெண் தொழில் முனைவோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஜென் டேக்ஸ் கிளினிக் மையத்தின் பட்டய கணக்காளர்கள்  தலைமை ஆலோசகர் பால் தங்கம்,ஆலோசகரும் தலைமை செயல் அதிகாரியுமான அரவிந்த் தங்கம்,தொழில் நுட்ப அதிகாரி ஜெய மோகன் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக,பல்வேறு துறை சார்ந்த தொழிலதிபர்கள், சிரஞ்சீவி ராஜன்,கனிஷ்கா,சுப சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு  நவீன தொழில் நுட்பம் சார்ந்த சவால்கள் குறித்தும்,சிறு குறு தொழில் முனைவோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினர்.

இதனை தொடர்ந்து புதிய நிதி நிலை அறிக்கை குறித்து பட்டய கணக்காளர்கள் அரவிந்த் மற்றும் பால் தங்கம் ஆகியோர் பேசுகையில், மத்திய பட்ஜெட் 2024-ல் ஜி.எஸ்.டி.சிறு குறு தொழில் துறையினருக்கு சாதகமாக, வரி விலக்குகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜி.எஸ்.டி. படிவங்களை எளிதாக்கி, சிறு தொழில்களுக்கு வரி செலுத்துவதை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மொத்தத்தில், 2024-25 மத்திய பட்ஜெட் ஜி.எஸ்.டி. சிறு குறு தொழில் துறையினருக்கு பல சாதக அம்சங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments