ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் 12 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!

ஸ்ரீ அபிராமி மருத்துவமனை மற்றும்  கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், இயக்குனர் டாக்டர். குந்தவிதேவி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக   தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்  ,டாக்டர் மு.நாராயணசாமி, கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற சுமார் 270 மாணவ, மாணவியர்களுக்கு இளங்கலை பட்டங்களை  வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய அவர்,நவீன தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறிய அவர்,மருத்துவ துறையில் தற்போது வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால்,மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக விழாவில் கவுரவ அழைப்பாளராக, பேராசியர், எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளரும் ஆன முனைவர் பர்வீன் சுல்தானா மாணவ, மாணவிகளிடையே உரையாடினார்.

அப்போது பேசிய அவர்,

மாணவர்கள் கற்கும் கல்வி  சமூகத்திற்கு பயனுள்ளதாக அடுத்த தலைமுறைக்கு விதையாக  இருக்க வேண்டும் என கேட்டு கொண்ட அவர், மருத்துவத்தில்  மிக முக்கிய சேவை பணிகள் தொடர்பான துறைகளை தேர்வு செய்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தமது  வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

விழாவில், செவிலியர், மருந்தாளுனர், துணை மருத்துவ அறிவியல் மற்றும் பிசியோதெரபி பாடங்களில் தேர்ச்சி பெற்ற 270  மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.

தொடர்ந்து,தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்கள் சிறப்பு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் ஸ்ரீ அபிராமி மருத்துவமனை மற்றும் கல்வி குழுமங்களின்  இயக்குனர்கள் டாக்டர்  பாலமுருகன் செந்தில்குமார் மற்றும் மருத்துவர்கள்   உமாதேவி,  சுசரிதா, டாக்டர் அர்வின் பாபு. ஜெயபாரதி, ரேணுகா,  ஜீவானந்தம்,  நரேஷ் பாபு,  குகன். பேராசிரியர் மணிமேகலை, உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள்,அலுவலகப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments