எட்டையபுரம் அருகே நேற்றிரவு 1 மணி நேரம் வானில் வட்டமடித்த மர்ம உருவம்!! ஏலியன்கள் பீதியில் பொதுமக்கள்!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தில் நேற்றிரவு 7 மணி அளவில் வானில் திடீரென அதிக வெளிச்சமாக இறக்கைகள் மற்றும் வால்கள் கொண்ட 3 மர்ம உருவங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்தபடி,
சுற்றிக்கொண்டிருப்பதை கண்டு அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வானில் தோன்றிய மர்ம உருவம் என்னவென்று அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியபோது:
தங்களது கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென வானத்தில் வெளிச்சமாக இருப்பதைக் கண்டு தங்களிடம் வந்து கூறியதாகவும் தாங்களும் சென்று வானில் பார்த்தபோது மர்மமான 3 உருவங்கள் இறக்கைகள் மற்றும் வால்கள் உள்ளது போல வானில் ஒரே இடத்தில் தோன்றி வட்டமடித்தபடி வேகமாக சுழன்று கொண்டிருந்ததாகவும்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின் மறைந்துவிட்டாகவும் தெரிவித்தனர். இதேபோன்று நள்ளிரவு 12 மணியளவிலும் இந்த உருவங்கள் மீண்டும் தோன்றியதாக அப்போது மக்கள் கூறுகின்றனர்.
இதனால் முத்தல்லாபுரம் கிராமத்தில் திடீரென வானத்தில் தோன்றிய மர்ம உருவம் ஏலியன்களாக இருக்கக்கூடுமோ? என்ற அச்சத்தில் முத்துலாபுரம் மக்கள் மூழ்கி உள்ளனர். ஆகையால், வானிலை ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இக்கிராமத்தில் தோன்றி மறைந்த மர்ம வெளிச்சமான உருவம் என்னவென்று ஆய்வு செய்து முழுமையான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.
Comments