மூணாறு மக்களுக்காக மூணாறில் செயல்பட்டு வரும் நைட் கைடு அசோசியேஷன் தலைமையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மிகப் பிரபல சுற்றுலா தளமான மூணாறு பகுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் மூணாறு பகுதியில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு ஏதாவது அவசர சிகிச்சை என்றால் பல கிலோமீட்டர் தூரம் உள்ள ஆம்புலன்ஸ் சேவைகளையே அழைத்து வர வைக்கின்றனர். 

ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னரே பல உயிர்களும் பறிபோகின்றது, இவ்வாறு வரவழைப்பதன் மூலம் ஏராளமான பணத்தையும் வாங்கி செல்கின்றனர் இதற்கு ஒரு தீர்வு காணும் விதமாக மூணாறு நைட் கைடு அசோசியேஷன் தலைமையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது. இவர்களின் லட்சியம் பணம் வசூலிப்பது இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

சாதாரணமான பாவப்பட்ட குடும்பத்திடமிருந்து சிகிச்சைகோ ஆம்புலன்ஸ் சேவைக்கும் பணம் வசூலிப்பதில்லை என தெரிவித்துள்ளனர். டீசல் மற்றும் வாகன ஓட்டுனரின் சம்பளம் மட்டும் கொடுத்தால் போதும் என நைட் கைடு அசோசியேஷன் தலைமையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பலவித சுற்றுலாப் பயணிகள் வருகின்ற வேளையில் நூற்றுக்கணக்கான உயிர்களும் பலியாகிறது மற்றும் ஆபத்துக்களும் நேரிடுகிறது இதை கட்டுப்படுத்தும் விதமாக நைட் கைடு அசோசியேஷன் தலைமையில் புதிய ஒரு ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது. 

ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைத்தது மூணாறு மக்கள் தலைமையில் காந்தி சிலை அருகில் ஆகும். ஆம்புலன்சில் சிறப்பு சேவைகளும் அமைந்துள்ளது டி லெவல் ஐ சி யு ஆம்புலன்ஸ், இன்குபேட்டர் போன்ற சிறப்பம்சங்களும் அமைந்துள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதுகாக்கும் வென்டிலேட்டர் போன்றவைகளும் இந்த வாகனத்தில் அமைந்துள்ளது. ஒரு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான அனைத்தும் இந்த வாகனத்தில் அமைந்துள்ளது. ஐ சி யு ஆம்புலன்ஸ் மூலம் அடுத்த ஐசியோ ஆம்புலன்ஸ்க்கு மாற்றும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

 இதில் செயல்படுவது ஒரு சிறந்த மருத்துவர், மற்றும் வாகன ஓட்டுநர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஃப்ரீசர் போன்றவைகள் அமைந்துள்ளது. மூணாறு சுற்றுவட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மொபைல் பிரீசர் தேவைப்பட்டால் இலவசமாகவே வழங்கப்படும். 

மொபைல் ஃப்ரீசரில் ஆம்புலன்ஸில் கொண்டு வர வேண்டும் என்றால் ஆம்புலன்ஸ்க்கு தேவையான செலவுகளை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் நீங்களே உங்கள் வாகனங்களை வைத்து மொபைல் பிரீசரை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் மூணாறு, நைட் கைடு அசோசியேஷன் தலைமையில் தெரிவித்துள்ளனர். விரைவில் மூணார் மக்களுக்காக இலவசமாக மேலும் பல பிரீசர்களை வாங்குவதற்கு தீர்மானிக்க ப்பட்டுள்ளனர். 

உங்களது வெற்றி பயணம் தொடர நாளைய வரலாறு செய்தி குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

நாளை வரலாறு செய்திக்காக,

-மணிகண்டன் கா, மூணாறு.

Comments