தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு!!


ஆண்டுதோறும் முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டணத்தை மாற்றியமைத்து வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதன்மை சுங்கச்சவாடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியானது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அது தள்ளிப் போனது.

தற்போது நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையிலும் உயர்த்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 65 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

-அருண்குமார்,கிணத்துக்கடவு.



Comments