எம்.ஜி.மோட்டார்ஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!!
எம்.ஜி.மோட்டார்ஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டம். கோவை பி.பி.எஸ்.எம்.ஜி.மோட்டார்ஸ் சார்பாக நூறு எம்.ஜி.கார் வாடிக்கையாளர்கள் ஒரு நாள் இலவச சுற்றுலாவாக அழைத்து சென்று கவுரவிப்பு.
பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான,எம்.ஜி.மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக எம்.ஜி.மோட்டார் நிறுவனத்தின் காமட் எனும் எலக்ட்ரிக் வகை கார்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள பி.பி.எஸ்.எம். ஜி.மோட்டார்ஸ் ஷோரூமில் காமெட் வாடிக்கையாளர்களுக்கான விழா நடைபெற்றது.
எம்.ஜி.மோட்டார்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இதில் பி.பி.எஸ்.எம். ஜி.மோட்டார்ஸ் நிறுவனத்தின் நூறு வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரு நாள் டிரிப்பாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டர் தீம் பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதற்கான விழா பி.பி.எஸ்.எம். ஜி.மோட்டார்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.இதில் பி.பி.எஸ்.எம். ஜி.மோட்டார்ஸ் கோயமுத்தூர் மண்டல பொது மேலாளர் மருதாச்சலம்,தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட், எம்.ஜி.மோட்டார்ஸ் தமிழக ஏரியா மேனேஜர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது காமெட் காரில் பி.பி.எஸ்.எம். ஜி.மோட்டார்ஸ் வளாகத்தில் இருந்து காளப்பட்டி,அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் பூங்காவிற்கு ஒரு நாள் சுற்றுலா பயணமாக சென்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பி.பி.எஸ்.எம். ஜி.மோட்டார்ஸ் நிறுவனம் செய்திருந்தது குறிப்பிடதக்கது.
-சீனி, போத்தனூர்.
Comments