மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டி!!

மலேசியாவில்  நடைபெற்ற  சர்வதேச யோகா போட்டியில் கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பர்ப்பிள் டாட்ஸ் (PURPLE DOTS) பள்ளியை  சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி,வெண்கலம் என 17 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. லிங்கான் யுனிவர்சிட்டி கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர். இதில் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள பர்ப்பிள் டாட்ஸ் (PURPLE DOTS) பள்ளியில் பயிலும்,

மூன்று  வயது முதலான குழந்தைகள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இதில் ஆர்ட்டிஸ்டிக்,ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம், சக்ராசனம் என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில்,கலந்து கொண்ட பர்ப்பிள் பள்ளி .குழந்தைகள் உட்பட மாணவ, மாணவிகள் ஐந்து தங்கம் ஆறு வெள்ளி,ஆறு வெண்கலம் என பதினேழு பதக்கங்கள் பெற்று அதிக புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.

இந்நிலையில் கோவை விமான நிலையம் திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு, 

பர்ப்பிள் டாட்ஸ் (PURPLE DOTS) பள்ளியின் தாளாளர் கௌதமன்,முதல்வர் கனகதாரா, பயிற்சியாளர் அகிலாண்டேஸ்வரி, மற்றும் பெற்றோர்கள் உறவினர்கள்,பள்ளி ஆசிரியர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ,மாணவிகள் விரைவில் ஸ்ரீலங்கா, அந்தமான்,தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள போட்டிகளிலும் கலந்து கொள்ள உள்ளனர்.

-சீனி,போத்தனூர்.

Comments